மகளை காக்க கணவரை சுத்தியால் அடித்துக் கொன்ற மனைவி..!
மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை மனைவி சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்புக்காக கொலை நிகழ்ந்ததாக வழக்கில் இருந்து அந்த பெண்ணை விடுவிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அவர் போதையில் இருந்த பொழுது தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது மகளை காப்பாற்ற முயன்ற போது ஏற்பட்ட கைகலப்பில் அவர் தனது கணவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.
இதுகுறித்த விசாரணையில் கணவர் தன் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தெரியவந்தது. இந்த விவகாரத்தை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அதனை தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது சிறப்பு நிகழ்வாக மாற்றி முடிவு செய்துள்ளனர்.






