மகளை காண முடியவில்லை என ரேகா வருத்தம்..!
1980, 1990களில் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த பிரபல நடிகை ரேகா தனது மகளை பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை ரேகாவின் ஒரே மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார். படிப்பை முடித்துக் கொண்ட பின் அவர் அங்கேயே வேலை பார்த்து வருகிறார்.
கொரொனா பரவல் அதிகமாக இருப்பதால் சென்னை திரும்ப முடியவில்லை. இது பற்றி பேசிய ரேகா தன்னுடைய மகள் நியூயார்க்கில் படித்து முடித்து தற்போது வேலை செய்து வருகிறார். மகளை தனியாக தவிக்க விட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் தானும் தன் கணவரும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தன் மகள் அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமை படுகிறார்கள் என்றும், தான் யார் மீதும் பொறாமை படுவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.





