கோப்புகளை தூக்கி எறிந்த ஆசிரியை பணியிடை நீக்கம்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்து கோப்புகளை தூக்கி எறிந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அறந்தாங்கி அடுத்த மணல்மேல்குடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமாரிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் ஆசிரியை அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணினி மற்றும் கோப்புகளை தூக்கி எறிந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதுதொடர்பாக வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





