பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமி சென்னையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தார் .
சில மாதங்களுக்கு முன் அவர் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஹரி பிரசாத் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி விடுதியில் தங்கி படிக்கும் போது அவர் கருவுற்றிருப்பதை உணர்ந்தும் விடுதி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
இதன் பின்னரே பள்ளி தலைமை ஆசிரியர் குமரகுருபரர் விடுதி காப்பாளர் செண்பகவல்லி, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் ஹரி பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





