அமைச்சர் சிவசங்கருக்கு 2 ஆவது முறையாக கொரோனா தொற்று..!
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மேற்கொண்ட சோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் சிவசங்கருக்கு ஏற்கனவே கொரொனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் இரண்டாவது முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





