மண வாழ்க்கையிலிருந்து பிரிந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி..!
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். சினிமாவில் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் திருமணம் செய்து கொண்டார்.
18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில் மண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும்படி இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.






