--- --:--:-- --

ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு..!

2

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு விமானங்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் புறப்பட தயாராக இருந்துள்ளனர்.

 

விமான ஓடுபாதை புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்களும் செல்வதை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து ஹைதராபாத் விமான ஓட்டி அறிவுறுத்தினார்.

 

இதையடுத்து பெங்களூரு செல்லும் எமிரேட்ஸ் விமானம் முதலில் புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு துபாய் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்திய விமான கட்டுபாட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon