ஒரே இடத்தில் பிடிபட்ட இரண்டு மலைப்பாம்புகள்..!
புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் கோழிகளை விழுங்கிய இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்டன. எழுப்பூர் அருகே உள்ள மன்னவேல் பட்டியில் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைந்த மலைப்பாம்புகள் கோழிகளை விழுங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சிதம்பரம் என்பவரின் வீட்டில் அருகே கோடிகளை பிடிக்க இரண்டு மலைப்பாம்புகள் வந்துள்ளன. சிதம்பரம் கூச்சலிட்டதால் மலைப்பாம்புகள் அடர்ந்த புதருக்குள் சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் புதருக்குள் மறைந்து இருந்த இரண்டு மலைப்பாம்புகளை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட இரண்டு மலைப்பாம்புகள் ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டன.






