--- --:--:-- --

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்..!

3

ஜார்க்கண்ட் மாநிலம் பகராவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்து 55 வயது நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்ட மறுநாள் நடக்கவும், பேசவும் முடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சல்காவிட் கிராமத்தில் வசிக்கும் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அவருக்கு அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்.

 

மறுநாள் அவர் எழுந்து நிற்கவும், சில வார்த்தைகளை பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப் படுத்திய மருத்துவர் அவருக்கு அதிசயமான நடவடிக்கை குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

 

Right Menu Icon