அரசுப் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அரசுப் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்..!
சென்னை பூந்தமல்லியில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரையில் ஏறி அரசு பள்ளி மாணவர்கள் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இதில் சைதாப்பேட்டையில் இருந்து சென்ற அரசு பேருந்து ஒன்று பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது.
அப்போது அங்கிருந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் ஜன்னல் கம்பி வழியே மேற் கூரை மீது ஏறி கூச்சல் போட்டனர். அதனை கண்டு முகம் சுளித்த வாகன ஓட்டிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.





