--- --:--:-- --

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

1

டகிழக்கு காற்றலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon