17வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கியது..!
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் 17வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில் அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி 17 வது கொரொனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம் தவணைக்கான தேதி வந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரொனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொள்ள தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.






