--- --:--:-- --

ஆன்லைனில் பெட்ரோல் வாங்கினால் 5 ரூபாய் விலை குறைப்பு..!

2

நாமக்கலில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பினால் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் சாலையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலிய நிலையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பினால் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு செய்து அதிரடியாக அறிவித்துள்ளது.

 

இதனையடுத்து ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பெட்ரோல் டீசலை தங்களது வண்டிகளுக்கு நிரப்பி செல்கின்றனர்.

 

மேலும் இது குறித்து பேசிய வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் வேறு எங்கும் விலை குறைக்காத போது இங்கு தற்போது 5 ரூபாய் குறைத்து விற்கப்படுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon