பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தொடக்கம்.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 505 ரூபாய் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதால் இதற்கான டோக்கன் விநியோகம் திருச்சியில் இன்று செய்யப்பட்டது.





