--- --:--:-- --

1ரூபாய்க்கு இட்லி, பரோட்டா..! குவிந்த மக்கள் கூட்டம்..!

3

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆங்கில புத்தாண்டையொட்டி உணவகம் ஒன்றில் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டா வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் ஜெய்சங்கர் என்பவர் பிருந்தா என்ற உணவகம் ஒன்றை கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

 

ஆங்கில புத்தாண்டையொட்டி ஏழை எளிய மக்கள் நல்ல உணவு அருந்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று ஒரு நாள் மட்டும் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், ஒரு புராட்டா ஒரு ரூபாய்க்கும், வாட்டர் பாட்டில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

Right Menu Icon