கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை சாப்பிட்ட சிறுவர்கள்..!
சத்தியமங்கலம் அருகே கொய்யாக்காய் என நினைத்து காட்டாமணக்கு செடியில் உள்ள விஷ காய்களை தின்ற 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகன்களான சதீஷ்குமார், உதயகுமார், பூவரசன், நிவேஷ் ஆகிய நான்கு சிறுவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்பொழுது பள்ளி விடுமுறை காலம் என்பதால் நான்கு சிறுவர்களும் அந்த பகுதியில் உள்ள சாலையோர வேலியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த வேலியில் உள்ள காட்டாமணக்கு செடி களில் இருந்த காய்களை கொய்யாக்காய் என நினைத்து நான்கு சிறுவர்களும் அந்த காய்களை சாப்பிட்டுள்ளனர்.
இந்த காய்களை தின்ற சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்களது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் 4 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





