நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி..!
போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி காலணியை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பில் குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 5 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி நீதிபதியை நோக்கி தனது காலணிகளை வீசினார். ஆனால் காலணிகள் நீதிபதி மீது படவில்லை என்றாலும் இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





