--- --:--:-- --

கழிப்பறை சுவரில் இருந்த கோடி ரூபாய் நோட்டுகள்..!

9

ழிப்பறை சுவரில் குழாய் பழுதை நீக்க சென்ற பிளம்பருக்கு பல கோடி ரூபாய் கிடைத்துள்ளது இணையதளத்தில் பரவி வருகிறது.

 

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் தேவாலயம் ஒன்றில் பொது குளியலறை கழிப்பறைகளில் ஏற்பட்ட பழுதை நீக்க சென்ற ஜஸ்டின் என்ற பிளம்பர் குளியலறை மற்றும் கழிப்பறை சுவர்களில் 6 லட்சம் டாலர் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உடனடியாக தேவாலய நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறை விசாரணையில் 2014ஆம் ஆண்டில் கொள்ளை போன பணம் இது என்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேர்மையாக நடந்து கொண்ட நபருக்கு 20 ஆயிரம் டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டது.

 

திரைப்படங்களில் வருவது போல நடந்த இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணைகளும் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காரணம் அங்கு கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை.

Right Menu Icon