--- --:--:-- --

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர், நடத்துனர் சிறையில் அடைப்பு..!

5

விழுப்புரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார்.

 

அப்போது பேருந்தில் நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க பேருந்து நடத்துனர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அவருக்கு துணையாக செயல்பட்டதாக ஓட்டுனரையும் போலீசார் கைது செய்தனர். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon