3 மாநிலங்களில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்..!
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் போலி கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடர்பான எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் போலி தடுப்பூசி முகாம்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.






