--- --:--:-- --

வெறும் கையால் சாக்கடையை அள்ளிய தூய்மை பணியாளர்..!

6

கிழக்கு கடற்கரை சாலையில் தூய்மை பணியாளர் ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாக்கடையை சுத்தம் செய்துள்ளார். சாக்கடையை சுத்தம் செய்யும்போது கவனமாக கவசமிட்டு பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை பயன்படுத்தியே சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பெரும்பாலான இடங்களில் நடைமுறைப்படுத்தவில்லை. அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் துறை பணியாளர் ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கையால் சாக்கடை அள்ளும் அவலம் அரங்கேறி உள்ளது.

 

சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அதிகாரிகள் மற்றும் 190 இரண்டாவது வார்டு உதவிப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அலட்சியப்போக்கே இதற்கு காரணமாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon