மீட்கும்போது உயிருடன் இருந்த பிபின் ராவத்..!
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலில் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் தகவல் தெரிவித்துள்ளார்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 14 பேர் ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதியில் வீரர் முரளி அங்கு நடந்தவை குறித்து தகவல் அளித்துள்ளார்.
இதில் விபத்தில் சிக்கிய 14 பேரில் இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் பிபின்ராவத் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரை மீட்டு சென்றபொழுது அவர் அங்கிருந்து ராணுவ பணியாளர்களிடம் தனது பெயர் பிபின்ராவத் எனக்கூறியதாக தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவரை போர்வை போர்த்தி ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தீயணைப்பு வீரர் தகவல் தெரிவித்துள்ளார்.






