யூடியுபர் மாரிதாஸ் கைது..!
முப்படை தலைமை தளபதியின் மரணம் தொடர்பாக விமானப்படை மற்றும் மத்திய அரசின் கருத்துக்கு எதிராக முதலில் பதிவிட்ட மாரிதாஸ் என்கிற யூடியூபரை காவல்துறை கைது செய்துள்ளது.
மாநில அமைதியை குலைக்கும் விதமாகவும் மாரிதாஸ் கருத்து பதிவிட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்கு பதிவு செய்தவுடன் மாரிதாஸ் தனது கருத்தை நீக்கியதாகவும், காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மதுரையில் அவரை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




