--- --:--:-- --

52 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் தொற்று..!

8

உலகம் முழுவதும் 52 நாடுகளுக்கு பரப்பிய ஓமைக்ரான் வகை கொரொனா தொற்று மொத்தம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை வைரஸ் கடந்த மாதம் 24ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

 

இந்த வகைக் கொரொனா நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுவரை 52 நாடுகளில் 984 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் நாட்டில் அதிகபட்சமாக 246 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.

 

இதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவில் 228 பேருக்கும், ஜிம்பாப்வேயில் 50 பேருக்கும், அமெரிக்காவில் 40 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் 23 பேருக்கும் இவ்வகை தொற்று கண்டறியப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon