--- --:--:-- --

பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி..!

4

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதனின் முதுகு தண்டுவட வலி காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை இணையத்தில் பதிவேற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சிறையிலிருந்த பப்ஜி மதன் முதுகு தண்டு வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

அவரை சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் போலீசார் அனுமதித்துள்ளனர். முதுகுவலி தொடர்பான சிகிச்சைகள் மதனுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது மதன் உண்மையை கூறுகிறாரா என்பதை அறியவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon