--- --:--:-- --

சினிமா பார்த்த வடகொரிய சிறுவனுக்கு 14 ஆண்டு சிறை..!

3

உலகின் மர்ம தேசமாக விளங்கும் வடகொரியாவில் சினிமா பார்த்த 14 வயது சிறுவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளில் இருந்து வரும் திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்திற்கும் வட கொரியா தடை விதித்துள்ளது.

 

வெளி நாடுகளின் திரைப்படங்கள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக பார்த்த அல்லது கேட்ட, வைத்திருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் 15 ஆண்டுகளுக்கு உள்ளாக தண்டனை கிடைக்கும்.

 

இந்நிலையில் தென் கொரியாவின் திரைப்படத்தை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக யாங்காங்க் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் அந்த மாணவன் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon