மனைவி மிகவும் சுத்தமாக இருப்பதால் விவாகரத்து கேட்ட கணவர்..!
எப்போதும் சுத்தம் சுத்தம் என மனைவியின் விசித்திர நடவடிக்கையால் எரிச்சலடைந்த கணவர் ஒருவர் தனது மனைவி ஒரு நாளில் ஆறு முறை குளிக்கிறார் என்று விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2009 ஒன்பதாம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் லண்டனில் குடியேறி உள்ளனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில் உளவியல் ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. மனைவி வீட்டை சுத்தமாக வைப்பது கணவருக்கு முதலில் மகிழ்ச்சி அளித்தது.
அதன் பின்னர் மனைவியின் செயல்களால் பிரச்சனை தொடங்கியது. கணவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக செல்போன், சூட் ஆகியவற்றை சுத்தம் செய்தே ஆக வேண்டுமென தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் எரிஎரிச்சலடைந்த கணவர் இந்தியா திரும்பி மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிறகு இந்த பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு அதே பிரச்சினை மீண்டும் வந்துள்ளது.
பயன்படுத்தும் மடிக்கணினி, செல்போன் குழந்தைகளின் புத்தகங்கள் போன்றவற்றை சோப் போட்டு கழுவுவது, பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்வது, தினமும் ஆறுமுறை குளிப்பதாகவும் இருந்துள்ளார். மனைவியின் செயலால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.






