--- --:--:-- --

தானாகவே அழியும் தகவல் வசதியை விரிவுபடுத்திய வாட்ஸ்அப்..!

1

வாட்ஸ் அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி பயனாளர்கள் தங்கள் அனைத்து தகவல்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஆழிந்துவிடும் படி தேர்வு செய்யப்படும்.

 

இந்த அவகாசம் 24 மணி நேரமாகவோ, அல்லது 90 நாட்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயனாளர்கள் தகவல்களை ஏழு நாட்களுக்குப் பிறகு அழித்து கொள்ளும் வகையில் தேர்வு செய்யும் முறை இருந்தது.

 

இதில் ஒவ்வொரு நபரின் உரையாடலுக்கும் தனித்தனியாக தேர்வு செய்ய வேண்டும்.ஆனால் தற்போது மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும்செய்திகளை அழித்து கொள்ளும்படி தேர்வு செய்யலாம். இந்த வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப் செயலியை நடத்திவரும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon