மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல் ஆகிறதா..?
பெங்களூருவில் அதிகரித்து வரும் கொரொனா பரவல் காரணமாக மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பெங்களூருவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. மாநகராட்சி பரிந்துரை செய்தால் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






