மாயமானதாக கூறப்பட்ட பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!
திருத்தணி அருகே மாயமானதாக கூறப்பட்ட பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அருண்குமார் , வாணிஸ்ரீ தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் தேதி பெண்ணை காணவில்லை என தேடிப்பார்த்து உறவினர் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் பெண்ணின் சடலம் ஊருக்கு வெளியே உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.
அவருடைய இறப்புக்கு காரணம் கணவரும், குடும்பத்தினரும் தான் என குற்றம்சாட்டினார். இதனால் மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாத மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கணவர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.





