பயணத் தடைகள் மூலம் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது..!
கொரொனா வைரஸ் இதுவரை 23 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு பயணத் தடைகள் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
வைரசால் அச்சமடைந்துள்ள உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையிலும் இதுவரை 23 நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். பயணத் தடைகள் மூலம் பரவலை தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பயணிகளால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என்றும் உலக சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.






