--- --:--:-- --

பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஓ‌பி‌எஸ்..!

13

பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

அவர் விடுத்துள்ள அறிக்கையில் பாடங்களை நடத்தி முடிக்க ஆறு மாதம் தேவை என்பதால் பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

மாணவிகள் தேர்வுக்கு நிம்மதியாக தயாராக பாடங்களை குறைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஓ‌பி‌எஸ் மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon