--- --:--:-- --

ஒமைக்ரான் வகை வைரசால் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடை விதித்த ஜப்பான்..!

1

ஒமைக்ரான் வகை கொரொனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

 

இது வீரியமிக்க வைரஸ் என கூறப்படுவதால் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இஸ்ரேல் அரசு வெளிநாட்டவர்களுக்கு தடை விதித்துள்ளது.

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளுடன் விமான போக்குவரத்து நடைபெறாது என அறிவித்துள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா, நெதர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon