பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்..!
தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார். பல்வேறு மொழிகளில் 1300 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய நடன இயக்குநர் சிவசங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியான நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு சிகிச்சை செலவுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவசங்கர் உடல்நிலை மேலும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பலனின்றி நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






