தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவவில்லை..!
தமிழ்நாட்டில் ஓமைக்ரான் வகை கொரோனா பரவாத வகையில் நோய் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி எட்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதிக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டு இருக்கும் மருத்துவத் துறை செயலர் பரிசோதனை எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.






