--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்..!

2

தமிழகத்தில்  மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

 

இதில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

 

அதன்படி இன்று 12வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon