--- --:--:-- --

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கெளரவிப்பு..!

4

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

 

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. கொரொனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கவுரவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon