ஆன்லைன் கேம் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!
கம்ப்யூட்டர், செல்போன் என தொடர்ந்து கேம் விளையாடிக்கொண்டு இருந்த பட்டதாரி இளைஞர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் சந்திரசேகர்.
சிவில் இன்ஜினியர் பட்டதாரியான இவரது 22 வயதான மகன் தீபக் ஊரடங்கால் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார். இதற்காக இரண்டாவது மாடியில் உள்ள அறையில் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கேம் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியவர் திடீரென அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில தினங்களாகவே பதற்றத்துடனும் அவ்வப்போது கோபமடைந்த வந்த தீபக் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






