மனைவிக்காக 4 லட்சத்தில் சாலை அமைத்த கணவர்..!
ஆந்திராவில் தனது திருமணத்திற்காக 4 லட்சம் ரூபாய் செலவில் சாலையை சீரமைத்த மணமகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாராபுரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார், ரம்யா ஆகியோருக்கு கடந்த 13ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நரசாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் புதுமணத் தம்பதி சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் 4 லட்சம் ரூபாய் செலவில் சாலையை சீரமைத்து வந்தனர்.
புதுமண தம்பதியினர் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக வருவதையடுத்து மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.






