10 வயது சிறுமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த வளர்ப்புத் தந்தை..!
நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய பகுதியில் பத்து வயதான சிறுமி மீது அவரது வளர்ப்புத் தந்தை மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் வசித்து வருபவர் அந்தோணிராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் முதல் மனைவி பிரிந்து விட்ட நிலையில் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளன. தற்போது அந்த குழந்தைகள் சுஜா மற்றும் அந்தோணி ராஜ் உடன் வசித்து வருகின்றனர்.
காவல் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் அந்தோணிராஜ் மற்றும் மனைவி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களது குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மகேஸ்வரி காவல் நிலையத்தில் உள்ள பொருளை திருடியதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறியுள்ளனர் .
இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் வீட்டிற்கு வந்து மகேஸ்வரி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அலறித் துடித்த மகேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.






