100 க்கு 89 மதிப்பெண் பெற்று மேல் வகுப்புக்கு தகுதி பெற்ற 104 வயது மூதாட்டி..!
104 வயதான மூதாட்டி எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வில் நூற்றுக்கு 89 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கோட்டையம் மாவட்டம் பஞ்சாயத்தில் எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.
இந்த எழுத்தறிவு சோதனையில் கோட்டையத்தை சேர்ந்த 104 வயதான மூதாட்டி நூற்றுக்கு 89 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த தகவலை கேரள கல்வித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






