--- --:--:-- --

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!.

2

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அதே சமயத்தில் தற்போது கூடுதலாக கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையின் அளவை பொருத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon