வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்..!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் உள்ளிட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் உட்பட 3 பேர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மாணவர்களின் எதிர்காலம் கருதி மூன்று பேரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.






