ரஜினி பாட்டுக்கு வாரிசு நடிகையுடன் தனுஷ்..!
ரஜினிகாந்த் பட பாட்டை போட்டு சாரா அலிகானுடன் சேர்ந்து தனுஷ் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. ஆனந்த்எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் சாரா அலிகானுடன் சேர்ந்து ஹிந்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
தனுஷ் அந்த படத்தில் நடித்தபோது சாரா தனுஷின் தோழியாக இருக்கிறாள். சாராவுக்கு தமிழ்நாட்டு உணவு கொடுத்து அசத்தி இருக்கிறார் தனுஷ். மேலும் தனுஷ் பற்றி நிறைய பேசி இருக்கிறார். தனுஷ் தனக்கு கொடுத்த டிப்ஸ் மிகவும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜிம்மில் வொர்க் அவுட் செய்ய தவறினால் சாரா அலி கான் அந்த படத்தில் நடித்தபோது தனுஷையும் ஜிம்முக்கு அழைத்து சென்றுள்ளார். ரஜினியின் பேட்டை படத்தில் வரும் மரண மாஸ் பாடலை போட்டு வொர்க்அவுட் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது மீண்டும் வைரல் ஆகியுள்ளது.






