மழை பாதிப்புகளை 4வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
குடியிருப்புகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்கள் ஸ்டாலின் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நான்காவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.






