மன்னார்குடியில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி..!
தற்பொழுது மன்னார்குடியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கி திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் சுமார் 212 இடங்கள் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 240 க்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக மன்னார்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 25 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.






