--- --:--:-- --

பொதுமக்களுக்கு தமிழக ஆளுநர் வேண்டுகோள்..!

4

கன மழை தொடர்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளில் வெளியே வரவேண்டாம் என்று தமிழக ஆளுநரால் ஆர்‌என் ரவி அறிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்று தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை தொடர்ந்து தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அத்தியாவசிய மற்றும் இடமாற்றம் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon