--- --:--:-- --

மழையால் மின்தடை இருக்காது : அமைச்சர் செந்தில் பாலாஜி

3

ழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் மின்னகத்தில் புகார்களை தெரிவிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். மழையால் ஏற்படும் மின் பாதிப்புகளை சரிசெய்து இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையங்களில் மின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம், வள்ளுவர்கோட்டம் பகுதிகளில் மின் பணியை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon