25 ஆண்டுகளாக ஒரு பட்டாசு கூட வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராம மக்கள்..!
கரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வவ்வால் கூட்டத்திற்காக பட்டாசு வெடிப்பதை முற்றாக புறக்கணித்து உள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஜெயங்கொண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தில் சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் ஒதுக்குப்புறமாக உள்ள அய்யனார் கோவிலில் ஆலமரத்தில் பழந்திண்ணி வவ்வால்கள் உணவு தேடலுக்கு கொல்லிமலைக்கு படையெடுத்து பிரிவதற்கு முன்பாக மீண்டும் ஆலமரத்தை வந்தடைகின்றன.
இந்த வவ்வால்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் கிராம மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக எந்த நிகழ்வுகளிலும் பட்டாசுகளை அனுமதிப்பதில்லை என்றும் பெரியோர்களின் இந்த முடிவெடுக்கு இளைஞர்கள் பக்கபலமாக இருக்கின்றனர்.






