சீனாவில் பொது முடக்கம் மீண்டும் அமல் ஆகிறதா..?
சீன அரசு அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருப்பதால் அங்கு மீண்டும் பொது முடக்கம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பூஜ்ஜிய கொரொனா பாதிப்பு என்ற கொள்கையில் செயல்பட்டு வரும் சீன அரசு ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டால் கூட அந்த நகரத்திற்கு பொது முடக்கத்தை அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீசில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறது. சீனாவில் ஏற்கனவே மூன்று நகரங்கள் முடக்கத்தில் உள்ளன. எனினும் கடந்த 24 மணிநேரத்தில் 92 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.






